#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #🙏 ஓம் நமசிவாய எனும் குபேரன்
=======================
செல்வத்தின் அதிபதி குபேரன் யாருடைய பரம பக்தரென நீங்கள் நினைக்கிறீர்கள்?
அவரின் இதயத்தில் எப்போதும் இருந்து அருள்வது சிவபெருமான்.
இந்த ஆழ்ந்த பக்தியே குபேரனுக்கு சிவபெருமானால் வழங்கப்பட்ட ஒரு தெய்வீக பட்டத்தை உருவாக்கியது —✨ “சிவசஹா” ✨
🔱 “சிவசஹா” என்றால் என்ன?
=============================
சிவபெருமானின் பிரியமான நண்பர், நெருங்கிய துணை, என்றும் சிவனோடு ஒன்றிப்படுபவர் என்று பொருள்.
குபேரனின் பரமான சிவபக்தி மட்டுமல்ல… ஜோதிட ரகசியமும் இதற்குப் பின்னால் அழகாக இணைந்து இருக்கிறது!
🌙 குபேரனின் ஜென்ம நட்சத்திரம் — பூரட்டாதி
=======================================
குபேரன் பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி.
இந்த பூரட்டாதி நட்சத்திரம், 9 — 18 — 27 என எண்ணினால் வரும் பரம மித்ர தாரையில்
👉 சதய நட்சத்திரம் அடங்கும்.
பரம மித்ர தாரை என்பதே வளர்ச்சி, வைபவம், கீர்த்தி போன்றவற்றை தரும் சக்தி.
🔱 சதயம் = சிவம்
ஜோதிடத்தில் சதய நட்சத்திரத்தின் தெய்வம் — சிவன். அதனால் பூரட்டாதியிடம் மித்ரனாக வரும் நட்சத்திரம், “சிவ நட்சத்திரம்” என்ற பெயரையே தருகிறது.
இதன் அடிப்படையில்...
👉 பூரட்டாதியில் பிறந்த குபேரனுக்கு பரம மித்ர தாரையாய் வரும் “சதயம்”
👉 அதன் தெய்வம் “சிவம்”
👉 அதனால் உருவான பெயர் “சிவசஹா” — சிவனின் நண்பன்.
🧭 ஈசான்யமும், குபேர திசையும்
============================
🕉 ஈசான்யம் (வடகிழக்கு) – சிவபெருமானின் திசை
🪙 வடக்கு – குபேர திசை
குபேரன் சிவனின் பரம நண்பனாக இருப்பதால், இரு தெய்வங்களின் திசைகளும் அருகருகே அமைந்திருக்கின்றன.
சிந்தித்துப் பாருங்கள்....
🧭 வடகிழக்கு & வடக்கு — செல்வமும் சிவமும் அருகருகே!
🌺 குபேரன் வழிபாட்டின் சாரம்q
குபேரனை வணங்குவது என்பது வெறும் செல்வவளம் மட்டுமல்ல....அது சிவனின் அருளை பெற்றுதருவதற்குமாகும்.

