ShareChat
click to see wallet page
பழனி அருகே மேலும் ஒரு விபத்து - ஒருவர் பலி, 2 பேர் படுகாயம் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாழையம் அருகே சப்பளநாயக்கன்பட்டியில் 4 வழி சாலையில் அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திண்டுக்கல், N.S.நகரை சேர்ந்த வெங்கடேசன்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சாமிநாதபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #accident #accident
accident - ShareChat

More like this