தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படும் நிலையில, சென்னையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, நவம்பர் 20, 21, 22 ஆகிய 3 நாட்களும் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, கே.டி.சி.சி (KTCC) (சென்னை மழை குறித்த புதிய நிலவரம்: அடுத்த சுற்று மேகங்கள் தற்போது சென்னை நகரத்துக்குள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது நகரின் சில பகுதிகளுக்கு குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னைக்கு மீண்டும் ஒரு மிதமான, ஆனால் தீவிரமான மழைக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது,
முக்கிய குறிப்பாக இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கனமழை எதிர்பார்க்கப்படவில்லை, மேலும் அது பற்றி எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. இவை ரசிக்கக்கூடிய, குறுகிய நேர மழைப் பொழிவுகளாகனத்தான் இருக்கும். கனமழைக்கான நேரம் சென்னைக்கும் வரும், அடுத்த 'சக்கரத்தில்' சென்னை மக்கள் சிரிக்கும் அளவுக்கு மழைக்கான வாய்ப்பு இருக்கும்.
முந்தைய நிலவரம் மற்றும் தென் தமிழக மழைக்கான எச்சரிக்கை: முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை நோக்கி நகரும் என்பதால், தென் தமிழகத்துக்கு மிக கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் மேற்கு நோக்கி நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களுக்கும் மழை கிடைக்கும்.
அதே சமயம், தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகியவை கனமழைக்கான மண்டலத்தில் இருக்கும். இதில் மஞ்சோலை மலைப் பகுதிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்த மாதிரியான வானிலை அமைப்பில் அந்தப் பகுதிகள் அதிக மழையைப் பெரும் என்று கூறியுள்ளார். #🔴எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு🌧️ #🔴இன்றைய முக்கிய செய்திகள்

