*வரலாற்றில் இன்று*
அக்டோபர் 14
1066 : இங்கிலாந்தில் ஹாஸ்டிங்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் வில்லியமின் படைகள் இரண்டாம் ஹரோல்ட் மன்னனைக் கொன்றனர்.
1773 : அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்குவதற்கு முன் கிழக்கிந்தியக் கம்பெனியின் தேயிலைக் கப்பல்கள் பல மேரிலாந்தில் எரிக்கப்பட்டது.
1884 : அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மென் தான் கண்டுபிடித்த போட்டோகிராபி பிலிமிற்கு காப்புரிமம் பெற்றார்.
1898 : இங்கிலாந்து, கோர்ன்வால் அருகே மொஹேகன் என்ற நீராவிக்கப்பல் கவிழ்ந்ததில் 106 பேர் உயிரிழந்தனர்.
1902 : இந்தியாவின் முதல் வனத்துறை அருங்காட்சியகம் கோயம்புத்தூரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
1903 : யாழ்ப்பாணத்தின் ஜாஃப்னா என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டது.
1912 : அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் மில்வாக்கியில் உரை நிகழ்த்தியபோது மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவனால் சுடப்பட்டார்.
1913 : பிரிட்டனில் இடம்பெற்ற நிலக்கரி சுரங்க விபத்தில் 439 பேர் உயிரிழந்தனர்.
1920 : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக பெண்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
1939 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல், பிரிட்டன் கடற்படையின் போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1940 : இரண்டாம் உலகப் போர் :- லண்டனில் பிளிட்ஸ் குண்டு வீச்சுகளின் போது பால்ஹாம் ரயில் நிலையத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.
1943 : போலந்தில் நாஜிக்களின் வதை முகாமில் இருந்த 600 கைதிகள் கிளர்ச்சியை மேற்கொண்டதில் 11 நாஜிக்கள் கொல்லப்பட்டனர்.
300க்கும் அதிகமான கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
1944 : இரண்டாம் உலகப்போர் :- கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரம் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போர் :- ஜூலை 20 ல் இடம்பெற்ற ஹிட்லரின் படுகொலை முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரி இர்வின் ரோமெல் கட்டாயமாக தற்கொலை செய்ய தூண்டப்பட்டு இறந்தார்.
1948 : இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
1949 : சீன உள்நாட்டுப் போர்:- சீன கம்யூனிஸ்ட் படைகள் குவாங்சௌ நகரைக் கைப்பற்றின.
1953 : இந்தியாவில் எஸ்டேட் வரி சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1956 : நாக்பூரில் அண்ணல் அம்பேத்கர் தனது 3,85,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
1957 : ஸ்பெயினில் வாலென்சியா நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 81 பேர் உயிரிழந்தனர்.
1960 : கியூபாவில் வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
1964 : மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1968 : மேற்கு ஆஸ்திரேலியாவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 28 பேர் வரை உயிரிழந்தனர்.
விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ -7 விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் புவியைச் சுற்றுவது ஒளிபரப்பப்பட்டது.
1973 : தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் ஆட்சிக்காக போராட்டத்தில் ஈடுபட்டதால் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.
1983 : கிரனாடாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் பிரதமர் மோரிஸ் பிசப் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.
1987 : டெக்சாஸில் ஜெசிக்கா என்ற 18 மாத குழந்தை கிணறு ஒன்றில் விழுந்தது.
58 மணி நேரத்திற்கு பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாக காண்பிக்கப்பட்டது.
1990 : வளைகுடாப் போரினால் இந்தியாவில் ஒரே நாளில் பெட்ரோல் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.
1991 : பர்மாவின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
1994 : பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத், இஸ்ரேல் பிரதமர் ஜாக் ரபீன், வெளியுறவுத்துறை அமைச்சர் சிமோன் பெரஸ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
2014 : நேபாளத்தில் இடம்பெற்ற பனிப் புயலினால் 43 பேர் உயிரிழந்தனர்.
2017 : சோமாலியாவில் இடம்பெற்ற லாரி குண்டுவெடிப்பில் 358 பேர் கொல்லப்பட்டனர்.
400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
#வரலாறு #தெரிந்து கொள்வோம்
