#🌎பொது அறிவு
ஜனதாதளத்தில் தனது செல்வாக்கு குறைந்து விட்டதாக கருதிய யாதவ் ஜனதாதளத்திலிருந்து பிரிந்து இராஷ்டிரிய ஜனதாதளத்தை 1997 ஜூலை 3-ல் தொடங்கினார். மக்களவையின் 45 ஜனதாதள உறுப்பினர்களில் 17 பேர் யாதவை ஆதரித்தனர். அவர்கள் வெளியிலிருந்து குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தருவதாக கூறியதால் அரசு கவிழும் சூழலில் இருந்து தப்பியது.
21 அக்டோபர் 1997 ல் உத்திரபிரதேச மாநில சட்டமன்றத்தில் கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கு நடைபெற்றது, அப்போது சபை மாண்பை குறைக்கும் செயல்களும் வன்முறைகளும் நிகழ்ந்தன, அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்த குஜ்ரால் அரசு குடியரசு தலைவரிடம் பரிந்துரைத்தது. எனினும் குடியரசு தலைவர் கே. ஆர். நாராயணன் அப்பரிந்துரையை ஏற்க மறுத்து மறுபரிசீலனைக்கு அரசுக்கு அனுப்பினார். அலகாபாத் உயர் நீதிமன்றமும் உத்திரபிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை செயல் படுத்த தடை விதித்தது.
1997 நவம்பர் மாத தொடக்கத்தில் இராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜெயின் கமிசனின் சில அறிக்கைகள் ஊடகங்களுக்கு கிடைத்தது.
Kalaiselvan

