ShareChat
click to see wallet page
ஆயுளில் ஒரு முறையே ஹஜ் கடமையாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்” என்றார்கள். அப்போது ஒரு மனிதர், “ஒவ்வோர் ஆண்டிலுமா ஹஜ் செய்ய வேண்டும், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் “ஆம்” என்று சொல்லிவிட்டால் அது ஒவ்வோர் ஆண்டிலும் கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்” என்று கூறிவிட்டு, “நான் எதை செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல் உங்களுடைய முடிவுக்கு விட்டுவிட்டேனோ அதைப் பற்றி எதுவும் கேட்காமல் நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதைச் செய்யாமல் விட்டுவிடுங்கள்!” என்றார்கள். (முஸ்லிம்: 2599) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மக்களே! அல்லாஹ் மீது உங்கள் ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான் எனவே ஹஜ் செய்யுங்கள் (CD6iu6JILD: 2599) blogs Follow us on @Sid Cloulube Share அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மக்களே! அல்லாஹ் மீது உங்கள் ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான் எனவே ஹஜ் செய்யுங்கள் (CD6iu6JILD: 2599) blogs Follow us on @Sid Cloulube Share - ShareChat

More like this